சமநிலை
சிவா காளிதாசன்
2/10/20251 min read


உலகில் எல்லாம் சமநிலையிலேயே இருக்க வேண்டும், அது இயற்கை.
இயற்கை எப்போதும் சொல்லும்: "சமநிலையை குலைக்கும் எந்த ஒன்றையும் நான் சமப்படுத்துவேன்."
எனவே மகிழ்ச்சியாக இருங்கள், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.
நீங்கள் எதை நினைக்கின்றீர்களோ, அதாகவே மாறிக்கொண்டு இருக்கின்றீர்கள்.
நல்ல சிந்தனைகளை அதிகம் விதையிடுங்கள்.
உலகம் ஒரே நாளில் கட்டப்படவில்லை, எல்லாவற்றிற்கும் நேரம் தேவை.அதனால் பொறுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள்.
நீங்கள் தேடிக்கொண்டிருப்பது ஏற்கனவே உங்களை தேடிக்கொண்டிருக்கிறது.
அழகு என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
நீங்கள் உங்கள் தனிப்பட்ட இயல்பால் அழகானவர். நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்துங்கள்,
இன்றைய நாள் மீண்டும் உங்கள் வாழ்க்கையில் வராது, அதை புத்திசாலித்தனமாக செலவிடுங்கள்.
உங்களுடைய ஆழ்மனதிற்கு மிக அர்ப்புதமான் சக்தி உள்ளது.
அது உங்களையும் உங்கள் எண்ணங்களையும், செயல்களையும் நேரிடையாக தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமையுடையது..
நீங்கள் விதைப்பது போலவே அது வளரும்.எனவே, தயவுசெய்து நேர்மறை எண்ணங்களை விதையிடுங்கள்.